பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பத்தர் சூழ, பரா பரன் பாரில் வந்து, பார்ப்பான் என, சித்தர் சூழ, சிவபிரான், தில்லை மூதூர் நடம் செய்வான், எத்தன் ஆகி வந்து, இல் புகுந்து, எமை ஆளுங்கொண்டு, எம் பணி கொள்வான் வைத்த மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!