பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில் பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குஉடைந்து முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப் புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து.