திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறி உண்டு ஒன்றுஆகிலும் குறை ஒன்று இல்லோம் நிறையும் கருணையினால்
வெறி உண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க.
பறி உண்டவர் எம் பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே.

பொருள்

குரலிசை
காணொளி