பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்! புகலூர்க்கு அரசே! மன் உள தேவர்கள் தேடும் மருந்தே! வலஞ்சுழியாய்!- என் அளவே, உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்! உன் அளவே, எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே