திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: செவ்வழி

பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே,
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,
வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே

பொருள்

குரலிசை
காணொளி