பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஏவில் ஆரும் சிலைப் பார்த்தனுக்கு இன் அருள் செய்தவர், நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ, வாளை போய்ப் பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே.