திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

செவ் அழல் ஆய், நிலன் ஆகி, நின்ற சிவமூர்த்தியும்;
முவ் அழல், நால்மறை, ஐந்தும், ஆய முனிகேள்வனும்;
கவ்வு அழல் வாய்க் கதநாகம் ஆர்த்தான்-கடவூர்தனுள்
வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன்
அல்லனே?

பொருள்

குரலிசை
காணொளி