திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி,
எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
மறி உலாம் கையினர் மலர் அடி தொழுது எழ மருவும்
உள்ளக்
குறியினார் அவர் மிகக் கூடுவார், நீடுவான் உலகின் ஊடே.

பொருள்

குரலிசை
காணொளி