திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

கட்டு அமண் தேரரும், கடுக்கள் தின் கழுக்களும், கசிவு
ஒன்று இல்லாப்
பிட்டர் தம் அற உரை கொள்ளலும்! பெரு வரைப் பண்டம்
உந்தி
எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறைச்
சிட்டனார் அடி தொழ, சிவகதி பெறுவது திண்ணம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி