கோடு இடைச் சொரிந்த தேன் அதனொடும் கொண்டல்
வாய்விண்ட முன்நீர்
காடு உடைப் பீலியும் கடறு உடைப் பண்டமும் கலந்து
நுந்தி,
ஓடு உடைக் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
பீடு உடைச் சடைமுடி அடிகளார் இடம் எனப் பேணினாரே.