திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

நீற்றினர், நீண்ட வார்சடையினர், படையினர், நிமலர், வெள்ளை
ஏற்றினர், எரி புரி கரத்தினர், புரத்து உளார் உயிரை வவ்வும்
கூற்றினர், கொடியிடை முனிவு உற நனி வரும் குலவு
கங்கை-
ஆற்றினர், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.

பொருள்

குரலிசை
காணொளி