வரி அரா அதனிசைத் துயின்றவன் தானும், மா மலர்
உளானும்,
எரியரா, அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து,
பின்னும்
பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய், பணிவு இலாதவருக்கு
என்றும்
அரியராய், அரிவையோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.