பொரு சிலை மதனனைப் பொடிபட விழித்தவர், பொழில்
இலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழ் உற அடர்த்தவர், கோயில் கூறில்
பெரு சிலை, நல மணி, பீலியோடு, ஏலமும், பெருக நுந்தும்
அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம் தானே.