சாக்கியக்கயவர், வன் தலை பறிக்கையரும், பொய்யினால்
நூல்
ஆக்கிய மொழி அவை பிழையவை; ஆதலில், வழிபடுவீர்
வீக்கிய அரவு உடைக் கச்சையான், இச்சை ஆனவர்கட்கு
எல்லாம்
ஆக்கிய அரன், உறை அம்பர்மாகாளமே அடைமின், நீரே!