பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“அட்டுமின், இல் பலி!” என்று என்று அகம் கடைதோறும் வந்து, மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?- கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே.