நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்
தன்னை; ஞானப் பெருங்கடலை; நல்லூர் மேய,
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை;
பன்மையே பேசும் படிறன் தன்னை;
மடை இடையே வாளை உகளும் பொய்கை
மருகல் வாய்ச் சோதி மணி கண்ட(ன்)னை;-
கடை உடைய நெடுமாடம் ஓங்கு நாகைக்காரோணத்து
எஞ்ஞான்றும் காணல் ஆமே.