திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

புலம் கொள் பூந் தேறல் வாய்ப் புகலிக் கோனை;
பூம்புகார்க் கற்பகத்தை; புன்கூர் மேய,
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர்க் கங்கை
அவிர் சடைமேல் ஆதரித்த, அம்மான் தன்னை;
இலங்கு தலைமாலை பாம்பு கொண்டே, ஏகாசம்
இட்டு இயங்கும் ஈசன் தன்னை;-
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண்
நாகைக்காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி