திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

தூண்டு சுடர் மேனித் தூநீறு ஆடி, சூலம் கை ஏந்தி,
ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு, பொறி அரவம் காதில் பெய்து, பொன்சடைகள்
அவை தாழ, புரி வெண்நூலர்,
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி, நெடுந்தெருவே
வந்து எனது நெஞ்சம் கொண்டார்,
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி;
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

பொருள்

குரலிசை
காணொளி