புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார்,
பொறி அழல் ஆய் நின்றான் தன்னை;
உள்ளானை; ஒன்று அல்லா உருவினானை; உலகுக்கு
ஒரு விளக்கு ஆய் நின்றான் தன்னை;
கள் ஏந்து கொன்றை தூய், காலை மூன்றும் ஓவாமே,
நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார்
வெண்காடு மேவிய விகிர்தனாரே.