பெண்பால், ஒருபாகம்; பேணா வாழ்க்கை; கோள்
நாகம் பூண்பனவும்; நாண் ஆம் சொல்லார்;
உண்பார், உறங்குவார், ஒவ்வா; நங்காய்! உண்பதுவும்
நஞ்சு அன்றே, உலோபி! உண்ணார்;
பண்பால் அவிர்சடையர் பற்றி நோக்கி, பாலைப்
பரிசு அழிய, பேசுகின்றார்
விண்பால் மதி சூடி, வேதம் ஓதி, வெண்காடு
மேவிய விகிர்தனாரே.