திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே;
அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே;
கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல்
வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே;
சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய்
களைந்து என்னை ஆண்டார் தாமே;
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர்
எம்பிரானார் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி