திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

வெள்ளம் ஒரு சடைமேல் ஏற்றார் தாமே; மேலார்கள்
மேலார்கள் மேலார் தாமே;
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார் தாமே; கருத்து
உடைய பூதப்படையார் தாமே;
உள்ளத்து உவகை தருவார் தாமே உறு நோய் சிறு
பிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவை நஞ்சு உண்டார் தாமே பழன நகர்
எம்பிரானார் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி