திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

விடை ஏறி, வேண்டு உலகத்து இருப்பார் தாமே;
விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே;
புடை சூழ் தேவர் குழாத்தார் தாமே; பூந்துருத்தி,
நெய்த்தானம், மேயார் தாமே;
அடைவே புனல் சூழ் ஐயாற்றார் தாமே;
அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே;
படையாப் பல்பூதம் உடையார் தாமே பழனநகர்
எம்பிரானார் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி