திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மாறு இல் மதில் மூன்றும் எய்தார் தாமே; வரி
அரவம் கச்சு ஆக ஆர்த்தார் தாமே;
நீறு சேர் திருமேனி நிமலர் தாமே; நெற்றி நெருப்புக்
கண் வைத்தார் தாமே;
ஏறு கொடுஞ் சூலக் கையார் தாமே; என்பு
ஆபரணம் அணிந்தார் தாமே;
பாறு உண் தலையில் பலியார் தாமே பழனநகர்
எம்பிரானார் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி