திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார் தாமே;
நேரிழையை ஒரு பாகம் வைத்தார் தாமே;
பூண்டு அரவைப் புலித்தோல் மேல் ஆர்த்தார் தாமே;
பொன் நிறத்த வெள்ளச்சடையார் தாமே;
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்
தாமே; அங்கு அங்கே சிவம் ஆகி நின்றார் தாமே;
பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
பழனநகர் எம்பிரானார் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி