திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள் ஊறும்
அன்பர் மனத்தார் தாமே;
பேராது என் சிந்தை இருந்தார் தாமே; பிறர்க்கு
என்றும் காட்சிக்கு அரியார் தாமே;
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார் தாமே; உலகை
நடுங்காமல் காப்பார் தாமே;
பார் ஆர் முழவத்து இடையார் தாமே பழனநகர்
எம்பிரானார் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி