திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த
தீவண்ணர்; சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்த,
கொலை நவின்ற களியானை உரிவை போர்த்து,
கூத்து ஆடி, திரிதரும் அக் கூத்தர்; நல்ல
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண, கடு
விடை மேல், பாரிடங்கள் சூழ, காதல்
மலை மகளும் கங்கையும் தாமும் எல்லாம்
வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

பொருள்

குரலிசை
காணொளி