திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பட்டு உடுத்து, பவளம் போல் மேனி எல்லாம்
பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து, பாதம் நோவ
இட்டு எடுத்து நடம் ஆடி, இங்கே வந்தார்க்கு,
“எவ் ஊரீர், எம்பெருமான்?” என்றேன்; ஆவி
விட்டிடும் ஆறு அது செய்து, விரைந்து நோக்கி,
வேறு ஓர் பதி புகப் போவார் போல,
வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி,
வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

பொருள்

குரலிசை
காணொளி