திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

தீக் கூரும் திருமேனி ஒரு பால், மற்றை ஒருபாலும்
அரி உருவம் திகழ்ந்த செல்வர்;
ஆக்கூரில்-தான் தோன்றி புகுவார் போல,
அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும்
நோக்கார், ஒரு இடத்தும்; நூலும் தோலும் துதைந்து
இலங்கும் திருமேனி வெண் நீறு ஆடி,
வாக்கால் மறை விரித்து, மாயம் பேசி, வலம்புரமே
புக்கு, அங்கே மன்னினாரே.

பொருள்

குரலிசை
காணொளி