மண், இலங்கு நீர், அனல், கால், வானும், ஆகி மற்று
அவற்றின் குணம் எலாம் ஆய் நின்றாரும்;
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும்;
பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்;
கண் இலங்கு நுதலாரும்; கபாலம் ஏந்திக் கடை
தோறும் பலி கொள்ளும் காட்சியாரும்;
விண் இலங்கு வெண் மதியக் கண்ணியாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.