திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மட்டு இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடி,
மடவாள் அவளோடு, மான் ஒன்று ஏந்தி,
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி, நாளும் சில்பலிக்கு
என்று ஊர் ஊரின் திரிதர்வாரும்;
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்
தன் காலம் அறுப்பார் தாமும்;
விட்டு இலங்கு வெண்குழை சேர் காதினாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

பொருள்

குரலிசை
காணொளி