செஞ்சடைக்கு ஓர் வெண்திங்கள் சூடினாரும், திரு
ஆலவாய் உறையும் செல்வனாரும்,
அஞ்சனக் கண் அரிவை ஒருபாகத்தாரும், ஆறு
அங்கம் நால் வேதம் ஆய் நின்றாரும்,
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில்
ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்,
வெஞ்சினத்த வேழம் அது உரி செய்தாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.