கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்;
காரோணத்து என்றும் இருப்பார் போலும்;
இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்;
ஏகம்பம் மேவி இருந்தார் போலும்;
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்;
பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்;
செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்
திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.