அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்;
அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்;
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்;
நள்ளாறு நாளும் பிரியார் போலும்;
முல்லை முகை நகையாள் பாகர் போலும்;
முன்னமே தோன்றி முளைத்தார் போலும்;
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திருச்
சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.