திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

தலை ஏந்து கையானை, என்பு ஆர்த்தானை, சவம் தாங்கு
தோளானை, சாம்பலானை,
குலை ஏறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோள்
நாகம் அசைத்தானை, குலம் ஆம் கைலை-
மலையானை, மற்று ஒப்பார் இல்லாதானை, மதி கதிரும்
வானவரும் மாலும் போற்றும்
கலையானை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை,
கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

பொருள்

குரலிசை
காணொளி