திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மடல் ஆழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர்க்கண்
இடந்து இடுதலுமே, மலி வான் கோலச்
சுடர் ஆழி நெடுமாலுக்கு அருள் செய்தானை; தும்பி
உரி போர்த்தானை; தோழன் விட்ட
அடல் ஆழித் தேர் உடைய இலங்கைக் கோனை அரு
வரைக்கீழ் அடர்த்தானை; அருள் ஆர் கருணைக்-
கடலானை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை;
கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.

பொருள்

குரலிசை
காணொளி