திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

ஏடு ஏறு மலர்க்கொன்றை, அரவு, தும்பை, இளமதியம், எருக்கு,
வான் இழிந்த கங்கை,
சேடு எறிந்த சடையானை; தேவர் கோவை; செம் பொன்
மால்வரையானை; சேர்ந்தார் சிந்தைக்
கேடு இலியை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கிறி பேசி,
மடவார் பெய் வளைகள் கொள்ளும்
காடவனை; கஞ்சனூர் ஆண்ட கோவை; கற்பகத்தை; கண்
ஆரக் கண்டு உய்ந்தேனே!.

பொருள்

குரலிசை
காணொளி