நாரணனும் நான்முகனும் அறியாதானை, நால்வேதத்து
உருவானை, நம்பி தன்னை,
பாரிடங்கள் பணி செய்யப் பலி கொண்டு உண்ணும்
பால்வணனை, தீவணனை, பகல் ஆனானை,
வார் பொதியும் முலையாள் ஓர் கூறன் தன்னை, மான்
இடங்கை உடையானை, மலிவு ஆர் கண்டம்
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை,
கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!.