திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நெருப்பு உருவு திருமேனி வெண்நீற்றானை, நினைப்பார் தம்
நெஞ்சானை, நிறைவு ஆனானை,
தருக்கு அழிய முயலகன் மேல்-தாள் வைத்தானை,
சலந்தரனைத் தடிந்தோனை, தக்கோர் சிந்தை
விருப்பவனை, விதியானை, வெண்நீற்றானை, விளங்கு
ஒளிஆய், மெய் ஆகி, மிக்கோர் போற்றும்
கருத்தவனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண்
ஆரக் கண்டு உய்ந்தேனே!.

பொருள்

குரலிசை
காணொளி