திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்?
கண் இலேன்! மற்று ஓர் களை கண் இல்லேன்,
கழல் அடியே கை தொழுது காணின் அல்லால்;
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்; ஒக்க
அடைக்கும் போது உணர மாட்டேன்;
புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன் பூம்
புகலூர் மேவிய புண்ணியனே!.

பொருள்

குரலிசை
காணொளி