திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நீர் ஏறு செஞ்சடை மேல் நிலா வெண் திங்கள்
நீங்காமை வைத்து உகந்த நீதியானே!
பார் ஏறு படுதலையில் பலி கொள்வானே! பண்டு
அநங்கற் காய்ந்தானே! பாவநாசா!
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே! கருங்கைக்
களிற்று உரிவை கதறப் போர்த்த
போர் ஏறே! உன் அடிக்கே போதுகின்றேன்-பூம்
புகலூர் மேவிய புண்ணியனே!.

பொருள்

குரலிசை
காணொளி