திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

தே ஆர்ந்த தேவனை, தேவர் எல்லாம் திருவடி
மேல் அலர் இட்டு, தேடி நின்று,
நா ஆர்ந்த மறை பாடி, நட்டம் ஆடி, நான்முகனும்
இந்திரனும் மாலும் போற்ற,
கா ஆர்ந்த பொழில்-சோலைக் கானப்பேராய்!
கழுக்குன்றத்து உச்சியாய்! கடவுளே! நின்
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன்-பூம்
புகலூர் மேவிய புண்ணியனே!.

பொருள்

குரலிசை
காணொளி