திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

விரிசடையாய்! வேதியனே! வேத கீதா! விரி பொழில்
சூழ் வெண் காட்டாய்! மீயச் சூராய்!
திரிபுரங்கள் எரி செய்த தேவதேவே! திரு ஆரூர்த்
திரு மூலட்டானம் மேயாய்!
மருவு இனியார் மனத்து உளாய்! மாகாளத்தாய்!
வலஞ்சுழியாய்! மா மறைக்காட்டு எந்தாய்! என்றும்
புரிசடையாய்! உன் அடிக்கே போதுகின்றேன்-பூம்
புகலூர் மேவிய புண்ணியனே!.

பொருள்

குரலிசை
காணொளி