துன்னம் சேர் கோவணத்தாய்! தூய நீற்றாய்! துதைந்து
இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி,
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை
முடிமேல் வைத்து உகந்த தன்மையானே!
அன்ன நடை மடவாள் பாகத்தானே! அக்கு ஆரம்
பூண்டானே! ஆதியானே!
பொன் அம்கழல் அடிக்கே போதுகின்றேன்-பூம்
புகலூர் மேவிய புண்ணியனே!.