திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

பூண்டது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி, பொல்லாத வேடம் கொண்டு, எல்லாரும் காணப்
பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்; பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்;
வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால், வெற்பு அரையன் மடப்பாவை பொறுக்குமோ? சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

பொருள்

குரலிசை
காணொளி