மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்; “மா நிதியம் தருவன்” என்று வல்லீராய் ஆண்டீர்;
கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்! கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை உண்டேல்,
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருள வேண்டும்;
கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே!