“பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே! மற்று ஆரை உடையேன்?
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும்,
கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்!” என்று
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவை வல்லார் அமருலகு ஆள்பவரே .