திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லிக்கௌவாணம்

மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி; மலை அரையன் பொன் பாவை, சிறுவனையும், தேறேன்;
எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்; எம்பெருமான்! இது தகவோ? இயம்பி அருள் செய்வீர்!
திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில், திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்; நாளை,
“கண்ணறையன், கொடும்பாடன்” என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

பொருள்

குரலிசை
காணொளி