பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
தொடை மலி கொன்றை துன்றும் சடையன், சுடர் வெண்மழுவாள் படை மலி கையன், மெய்யில் பகட்டு ஈர் உரிப்போர்வையினான் மடை மலி வண்கமலம் மலர்மேல் மட அன்னம் மன்னி நடை மலி-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.