பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர் பற்று ஆய், “இடுமின், பலி!” என்று அடைவார் பதிபோலும் பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே.